இலங்கையில் கட்டாய ஜனாஸா எரிப்பை நிறுத்தி, கொரோனாவால் உயிரிழப்போரின் உடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப் போவதாக நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இவ்விவகாரம் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களின், வெளிநாட்டு தூதர்களின், தலைவர்களின் கவனத்தைப் பெற்றுள்ள போதிலும், தற்போது நடைமுறையில் உள்ள கட்டாய எரிப்பை மாற்றியமைப்பதற்கான எவ்வித உத்தரவும் தமக்கு வழங்கப்படவில்லையென தெரிவிக்கின்றனர் சுகாதார அமைச்சின் அதிகாரிகள்.
உத்தியோகபூர்வ சுற்று நிருபம் வெளியிடப்படாத வரை தற்போதைய நடைமுறை தொடரும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment