ரஞ்சனின் MP பதவி: மார்ச் 16 வரை 'பறிக்க' முடியாது - sonakar.com

Post Top Ad

Thursday 11 February 2021

ரஞ்சனின் MP பதவி: மார்ச் 16 வரை 'பறிக்க' முடியாது

 நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பின்னணியில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பதற்கான தற்காலிக தடை மார்ச் 16ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் ரஞ்சன் ராமநயாக சார்பில் தொடுக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு வழக்கினை விசாரித்து வரும் நீதிமன்றம் நாடாளுமன்ற செயலாளருக்கு இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.


இதேவேளை, மரண தண்டனைக் கைதிகளுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதித்தது போன்று ரஞ்சனுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment