ஹிஜாஸின் ஆட்கொணர்வு மனு வாபஸ் - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 February 2021

ஹிஜாஸின் ஆட்கொணர்வு மனு வாபஸ்

 


ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் கைதாகியுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.


வழக்கின் விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும் அவர் ஏலவே நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டு விட்டதால் குறித்த வழக்கை வாபஸ் பெறுவதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்ததன் பின்னணியில் வழக்கு முடிவடைந்துள்ளது.


ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்காக கடந்த வருடம் கைது செய்யப்பட்ட ஹிஜாஸ் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment