நா. உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கல் - sonakar.com

Post Top Ad

Tuesday, 16 February 2021

நா. உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கல்

 


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


நாரேஹன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்ற அதேவேளை பொது மக்களுக்கும், கட்டாயம் தடுப்பூசி அவசியப்படும் தேவையுள்ள வகையினரையுமே முற்படுத்த வேண்டும் எனவும் ஆகக்குறைந்தது 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் தான் பெற்றுக் கொள்ளப் போவதாக ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.


சுகாதார அமைச்சு அதிகாரிகளின் கவனயீனத்தால் சுமார் 18,000 தடுப்பூசிகள் வீணாகிப் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment