சுற்றுலாப் பயணிகளை நெருங்க வேண்டாம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 16 February 2021

சுற்றுலாப் பயணிகளை நெருங்க வேண்டாம்!

 


இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நெருங்கி தொடர்பாடலில் ஈடுபட வேண்டாம் என சுகாதார அமைச்சு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


புதிய வகை கொரோனா தொற்று அபாயத்தின் பின்னணியில் இவ்வாற அறிவுறுத்தப்பட்டுள்ள அதேவேளை சில சுற்றுலாத் தளங்களில் வழமை போன்று பொது மக்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நெருங்க முயற்சிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் சுற்றுலாப் பயணிகள் பிரத்யேக பாதுகாப்பு குமிழிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் விலகியிருப்பது அவசியம் என விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment