கடிதத்தில் ஒப்பமிடக் கூடத் தயங்கும் முஸ்லிம் MPக்கள்: அசாத் - sonakar.com

Post Top Ad

Saturday, 9 January 2021

கடிதத்தில் ஒப்பமிடக் கூடத் தயங்கும் முஸ்லிம் MPக்கள்: அசாத்

 


ஜனாஸா எரிப்பை எதிர்த்து ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான கடிதம் ஒன்றைத் தயாரித்தும் கூட 20 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதில் ஒப்பமிடாத நிலையில் அக்கடிதம் ஒரு மாதத்துக்கு அதிக காலமாக நா.உ முஜிபுர் ரஹ்மானிடம்  தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஆளுனரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி.


சமூக விவகாரங்களில் போதிய அக்கறையின்றி, கருத்துக்களை தெரிவிக்க அச்சப்படும் அளவுக்கும், நமக்காக யாரும் பேசினாலும் அதற்குரிய ஆதரவை வழங்கி தேவையான ஆவண உதவிகளை செய்வதற்கும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வராதமை மிகவும் வருத்தத்துக்குரிய விடயம் எனவும் தெரிவிக்கின்ற அவர்,  கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்கள் கட்டாயமாக எரிக்கப்படும் நடைமுறையை எதிர்த்து கேள்வியெழுப்ப நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு இருந்த தைரியம் கூட முஸ்லிம் உறுப்பினர்களுக்கு இல்லாமல் போனது கவலையளிக்கிறது என விசனம் வெளியிட்டுள்ளார்.


சாணக்கியன் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் நமக்காக பேசும் போது எமது உறுப்பினர்கள் திடமான நடவடிக்கையொன்றில் இறங்க முடியாது தவித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் ஆளுனர் மேலும் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment