பௌத்த துறவிகளுக்கு விசேட காப்புறுதித் திட்டம் - sonakar.com

Post Top Ad

Saturday, 9 January 2021

பௌத்த துறவிகளுக்கு விசேட காப்புறுதித் திட்டம்

 


பௌத்த துறவிகளுக்கு வருடத்துக்கு 2000 ரூபா மாத்திரமே செலுத்தும் விசேட காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


இத்திட்டத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்க நேரிடின் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 15000 ரூபாவையும், சிகிச்சைகளுக்காக 25000 ரூபாவையும் பௌத்த துறவிகள் பெற்றுக்கொள்ளலாம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


எதிர்காலத்தில் ஏனைய மதத் தலைவர்களுக்கும் இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment