GCC மாநாட்டில் கட்டார் அமீரும் பங்கேற்கிறார் - sonakar.com

Post Top Ad

Tuesday 5 January 2021

GCC மாநாட்டில் கட்டார் அமீரும் பங்கேற்கிறார்

 


மூன்றரை வருட கால இடைவெளியின் பின் வளைகுடா நாடுகளின் கூட்டுறவுக்கான அமைப்பின் வருடாந்த மாநாட்டில் கட்டார் அமீரும் கலந்து கொள்ளவுள்ளார்.


கட்டாருக்கு எதிராக நான்கு நாடுகள் விதித்திருந்த தடைகளின் பின்னணியில் அந்நாட்டுடனான எல்லைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைளும் முடக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்றிரவு கட்டாருடனான எல்லைகளைத் திறப்பதாக சவுதி அரேபியா அறிவித்திருந்தது. எனினும், நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதுமே தமது எல்லையைத் திறக்கவுள்ளதாக எகிப்து அறிவித்துள்ளது.


இருப்பினும் இன்று நடைபெறும் வளைகுடா நாடுகளின் கூட்டுறவுக்கான அமைப்பின் 41வது வருடாந்த மாநாட்டில் கட்டார் அமீரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment