மன்னர்கள் கூட இந்தளவு அநீதியிழைக்கவில்லை: மு.ரஹ்மான்! - sonakar.com

Post Top Ad

Saturday, 9 January 2021

மன்னர்கள் கூட இந்தளவு அநீதியிழைக்கவில்லை: மு.ரஹ்மான்!

 


இலங்கையில் ஆயிரமாயிரம் வருடங்கள் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்துக்கு மன்னர்கள் காலத்தில் கூட இந்த அளவுக்கு அநீதியிழைக்கப்படவில்லையென தெரிவிக்கிறார் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.


தேசத்தின் பொருளாதாரத்தில் மாத்திரமன்றி அரசியலிலும் முன்னோர் பாரிய பங்களித்திருந்த பூர்வீகத்தைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தை இந்த அளவு நோகடிக்கும் செயற்பாடு மிக மோசமான ஒடுக்குமுறையென தெரிவிக்கும் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு எந்த துரோகமும் செய்யாத சமூகம் எனவும் சோனகர்.கொம்முடனான விசேட நேர்காணலில் தெரிவித்தார்.


இலங்கையில் முஸ்லிம்களை வானத்திலிருந்த வீழ்ந்த அன்னியர்கள் போன்று நடாத்துவதற்கான அரசின் திட்டம் ஒட்டு மொத்த சமூகத்துக்கு எதிரான இனவாதமேயன்றி கட்சி அரசியல் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இப்பேற்பட்ட அரசுக்கு முட்டுக்கொடுப்பதையும் முஸ்லிம் சமூகம் மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


அடையாளத்தைத் தொலைக்காத முதுகெலும்புள்ள சமூகமாக நாம் போராட வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment