யாழ் சம்பவம்: வட - கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 9 January 2021

யாழ் சம்பவம்: வட - கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த நினைவுத் தூபி நேற்றிரவு இடிக்கப்பட்டதன் பின்னணியில் யாழ் மண்ணில் தொடர்ச்சியான அதிருப்தி நிலவி வருகிறது.


இந்நிலையில், தமிழ் அரசியல் தரப்புகள் கூட்டாக இணைந்து திங்கட்கிழமை 11ம் திகதி வட - கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளன.


சிறுபான்மை சமூகங்கள் தொடர்ச்சியாக ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வரும் தொடர்ச்சியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை மன்னார் - யாழ் மற்றும் கிழக்கு வாழ் முஸ்லிம் சமூகமும் பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment