ஹக்கீமோடு தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Sunday, 10 January 2021

ஹக்கீமோடு தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

 


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவரோடு தொடர்பிலிருந்தவர்களையும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இப்பின்னணியில், கடந்த 5ம் திகதி நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அவர் சென்றிருந்த போது அவரோடு நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களை சிசிடிவி மூலம் அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


தயாசிறி ஜயசேகரவைத் தொடர்ந்து ரவுப் ஹக்கீம் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை அண்மையில் நாடாளுமன்றில் பல்வேறு சந்திப்புகளில் மு.கா தலைவர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment