ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அட்டகாசம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 January 2021

ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அட்டகாசம்

 


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தமையை உறுதி செய்து ஜோ பைடன் வெற்றியாளராக அறிவிக்கப்படவிருந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளனர்.


வன்முறையில் ஈடுபட்ட ட்ரம்ப் ஆதரவாளர்களுள் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ள நிலையில் ஊடகங்கள் மீதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடாத்தி உபகரணங்களை சேதப்படுத்தியுள்ளனர்.


இந்நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் இச்சம்பவத்தினைக் கண்டித்து தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். தற்சமயம் வெள்ளை மாளிகை பாதுகாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment