ஒரே நாடு - ஒரே சட்டம் வருவது உறுதி: நீதியமைச்சர்! - sonakar.com

Post Top Ad

Thursday, 7 January 2021

ஒரே நாடு - ஒரே சட்டம் வருவது உறுதி: நீதியமைச்சர்!

 


நடைமுறை அரசின் ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற கொள்கை நிறைவேற்றப்படுவது உறுதியென தெரிவிக்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.


முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் உட்பட 35க்கு மேற்பட்ட சட்ட விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாகவும் நாட்டில் ஒரே சட்டம் என்கிற அடிப்படை நிறைவேறும் எனவும் தெரிவிக்கிறார்.


முஸ்லிம் பெண்களுக்கான விவாக வயதினை அதிகரிப்பதற்கு 10 வருடங்களுக்கு மேலாக விவாதித்தும் இதற்கென நியமிக்கப்பட்ட பிரத்யேக குழு இணக்கப்பாட்டுக்கு வரத் தவறியிருந்தது. இந்நிலையில், தற்போது சர்வாதிகாரத்தைப் பெற்றுள்ள ஜனாதிபதியின் அரசு, மறு பேச்சுக்கு இடமின்றி திருமண வயதை 18 ஆக மாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment