எரிப்பைத் தடுக்க 'அடிப்படைவாதிகள்' முயற்சி: விமல் - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 January 2021

எரிப்பைத் தடுக்க 'அடிப்படைவாதிகள்' முயற்சி: விமல்

 


சுகாதார நிபுணர்களின் தீர்மானத்துக்கமைவாக இலங்கை அரசு முன்னெடுக்கும் கொரோனா உடலங்களின் கட்டாய எரிப்பு நடைமுறையைத் தடுப்பதற்கு அடிப்படைவாதிகள் முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச.


தனதுரையின் போது, ஜனாஸா எரிப்பின் பின்னணியில் உள்ள அனைவரிடமும் இழப்பீட்டைப் பெறுவதற்கான நடவடிக்கையெடுக்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி தெரிவித்திருந்த கருத்துக்களையும் கடுமையாகச் சாடிய அவர், அவ்வாறு இழப்பீடு கேட்பது அச்சுறுத்தல் எனவும் இதற்காகவே அசாத் சாலியைக் கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், அடிப்படைவாதிகள் நிபுணர்கள் மீது அழுத்தங்களை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றமையும் அதற்கேற்ப கடும்போக்குவாத பௌத்த துறவிகளும் கருத்து வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment