தலதா மாளிகைக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக ஒருவர் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday, 7 January 2021

தலதா மாளிகைக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக ஒருவர் கைது!

 


தலதா மாளிகையைத் தகர்க்கப் போவதாக 119 ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் (51) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


நேற்று முன் தினம் மாலை இவ்வழைப்பை மேற்கொண்டுள்ள அவர், தலதா மாளிகையைத் தகர்ப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அச்சுறுத்தல் விடுத்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 


எனினும் அவ்வழைப்பூடாக தாக்குதல் திட்டம் ஒன்றிருப்பதாக 'தவறான' தகவலே வழங்கப்பட்டிருப்பதாகவும்  அவசர அழைப்பு ஊடாக இவ்வாறு தவறான தகவல் வழங்கியதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்படுகிறது.


இந்நிலையில் குறித்த நபரை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது (சோனகர்.கொம்).

No comments:

Post a Comment