வொஷிங்டன் கலகம்: நால்வர் உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 7 January 2021

வொஷிங்டன் கலகம்: நால்வர் உயிரிழப்பு

 


தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் தலைநகரில் உருவாக்கிய கலகத்தின் பின்னணியில் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பெண்ணொருவர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ள அதேவேளை மேலும் மூவர் மருத்துவ காரணங்களால் உயிரிழந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான செனட் ஒன்று கூடல் இடம்பெறவிருந்த நிலையில் தமது ஆதரவாளர்களை தலைநகருக்கு வருமாறு ட்ரம்ப் அழைத்திருந்ததன் பின்னணியிலேயே கலகம் உருவாகியிருந்தது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் ட்ரம்ப் செயற்பட முனைந்ததாகக் கூறி பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அவரின் கணக்குகளை முடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment