தொடரும் கட்டாய எரிப்பு: அமெரிக்கா விசனம்! - sonakar.com

Post Top Ad

Friday, 29 January 2021

தொடரும் கட்டாய எரிப்பு: அமெரிக்கா விசனம்!

 இலங்கையில் தொடரும் கொரோனா உடலங்களின் கட்டாய எரிப்பு விவகாரத்தில் அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தமது விசனத்தை வெளியிட்டுள்ளது.


இது குறித்து ட்விட்டர் ஊடாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம், இலங்கை அரசு குடிமக்களின் சமய மற்றும் கலாச்சார உரிமைகளை மதித்து செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.


சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற அதேவேளை எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் காத்திரமான நடவடிக்கை எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment