கொழும்பு இன்னும் பாதுகாப்பில்லை: மேயர் எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 January 2021

கொழும்பு இன்னும் பாதுகாப்பில்லை: மேயர் எச்சரிக்கை

 


கொழும்பு இன்னும் கொரோனா பரவலிலிருந்து விடுபடவில்லையெனவும் கொரோனாவுக்கு முந்திய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டதாக யாரும் எண்ண வேண்டாம் எனவும் தெரிவிக்கிறார் மேயர் ரோசி சேனாநாயக்க.


கொழும்பு மாநகர எல்லைக்குள் மாத்திரம் 12,255 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்ற அவர், 119 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.


இதேவேளை, மாநகர சபை ஊழியர்கள் 292 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment