ஞானசாரவுக்கு சொகுசு வாகனம் பரிசு! - sonakar.com

Post Top Ad

Friday, 8 January 2021

ஞானசாரவுக்கு சொகுசு வாகனம் பரிசு!

 


அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்ட பொது பல சேனாவின் ஞானசாரவுக்கு சொகுசு வாகனம் ஒன்று பரிசாகக் கிடைத்துள்ளது.


சுமார் பத்து வருடங்களாக நாட்டில் இன விரோத உணர்வுகளைத் தூண்டும் வகையில் நடந்து கொண்ட ஞானசார அரசியலில் குதித்து நாடாளுமன்றம் செல்வதை இலக்காக வைத்து 2015 பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்தார்.


2020 பொதுத் தேர்தலில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. எனினும், அவரது கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியலை தமதாக்கிக் கொள்ள தீவிர முயற்சி செய்த போதிலும் அதனை அத்துராலியே ரதன தேரர் தட்டிப் பறித்துக் கொண்டுள்ள நிலையில் தற்போது வெளிநாட்டில் உள்ள கோடீஸ்வர பக்தர் ஒருவர் ஞானசாரவுக்கு லேன்க்ரூசர் சொகுசு வாகனம் ஒன்றை பரிசளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment