தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா! - sonakar.com

Post Top Ad

Friday, 8 January 2021

தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா!

 


இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதன் பின்னணியில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றிருந்த நிலையில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவு நேற்றிரவு கிடைக்கப் பெற்றதாகவும் அதனூடாக தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.


இந்நிலையில், ஹிக்கடுவ பகுதியில் கொரோனா சிகிச்சை மையமாக இயங்கும் ஹோட்டல் ஒன்றில் தயாசிறி தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment