நேர்மையான மனிதனுக்கு 'ஒரு' முகமே இருக்கும்: அநுர - sonakar.com

Post Top Ad

Monday 11 January 2021

நேர்மையான மனிதனுக்கு 'ஒரு' முகமே இருக்கும்: அநுர

 


தனக்கு இரு வேறு முகங்கள் இருப்பதாகவும் தேவைப்பட்டால் 'கடுமையான' பக்கத்துக்கு மாறி தன்னால் தண்டனைகளைக் கொடுக்கவும் முடியும் எனும் தொனியில் அண்மையில் அம்பாறையில் வைத்து ஜனாதிபதி வெளியிட்ட நிலைப்பாட்டை கண்டித்துள்ளார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.


ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறு பேசுவது ஏற்புடையதல்ல எனவும் தெரிவிக்கும் அவர், தற்போதிருக்கும் பொருட்களின் விலையுயர்வு, கொரோனா தடுப்பு மருந்தின் இறக்குமதி செலவு அதிகரிப்பு என பல்வேறு காரணங்களுக்காக ஜனாதிபதிக்கு வெறுப்பும் கோபமும் இருக்கலாம். ஆனால், அதனை பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் தெரிவிக்கும் கலாச்சாரத்துக்கு இடமளிக்க முடியாது என அநுர மேலும் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதியின் கருத்துக்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்பட்டிருப்பதாக ஹரின் பெர்னான்டோ ஏலவே பொலிசில் முறையிட்டுள்ள அதேவேளை ஹரினுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு கோட்டாபே ராஜபக்சவே பொறுப்பென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


இந்நிலையிலேயே, நேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்க முடியும் எனவும் கோட்டாபே எண்ணும் அந்தக் காலம் மலையேறி விட்டதெனவும் அநுர தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment