ஜனாதிபதி செயலக பாதுகாப்பு பிரிவில் 30 பேருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Monday, 11 January 2021

ஜனாதிபதி செயலக பாதுகாப்பு பிரிவில் 30 பேருக்கு கொரோனா

 


ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் 30 விசேட அதிரடிப்படையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


விசேட அதிரடிப்படைப் பிரிவில் பலர் சுகயீனமுற்றது அவதானிக்கப்பட்டதன் பின்னணியில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடனடியாக தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


தற்சமயம் நாட்டில் 6823 பேர் கொரோனா தொற்றின் நிமித்தம் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment