நீதிபதி நவாஸ் சமூகப் பொறுப்பை மறக்கக் கூடாது: அசாத்! - sonakar.com

Post Top Ad

Sunday 24 January 2021

நீதிபதி நவாஸ் சமூகப் பொறுப்பை மறக்கக் கூடாது: அசாத்!

 


இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டிருக்கும் ஆணைக்குழுவில் பங்கேற்கும் நீதிபதி A.H.M.D. நவாஸ் தன் மீதான சமூகப் பொறுப்பை மறக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் ஆளுனருமான அசாத் சாலி.


நீதிபதி நவாஸ் இக்குழுவில் இடம்பெறுவதானது, ஒட்டு மொத்த சிறுபான்மை சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் அவர் நியாயமான முறையில் நடந்து கொள்வார் என்ற நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. அண்மைக்காலமாக முஸ்லிம்களை பாரிய மன உளைச்சலுக்குள்ளாக்கியிருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பும் மனித உரிமை மீறல் என்பதாலேயே இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தெற்காசிய மனித உரிமை ஆணைக்குழு, ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவும் அரசின் தவறை சுட்டிக்காட்டியிருக்கின்றன.


இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர் என்கிற அடிப்படையில் இந்த அநீதியையும் இணைத்து அதற்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டிய பாரிய சமூகப் பொறுப்பும் அவர் மீதிருப்பதை நீதிபதி நவாஸ் நினைவில் வைத்து, அல்லாஹ்வைப் பயந்து நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என தாம் வேண்டிக்கொள்வதாகவும் அசாத் சாலி மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).

No comments:

Post a Comment