எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு இழப்பீடு வேண்டும்: அசாத் - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 January 2021

எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு இழப்பீடு வேண்டும்: அசாத்

 


இலங்கையில் கட்டாய எரிப்புக்குட்படுத்தப்பட்ட ஜனாஸாக்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து இழப்பீட்டைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கிறார் முன்னாள் ஆளுனரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி.


கட்டாய ஜனாஸா எரிப்புக்குப் பின்னணியில் உள்ள அனைத்து அதிகாரிளிடம் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சொத்து முடக்கம் போன்ற வழிகளில் இவ்வாறு இழப்பீட்டைப் பெற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


நடைமுறை அரசில் இது சாத்தியமில்லையாயினும் கூட, ஆட்சி மாற்றத்தின் பின்னர் இதற்கான ஆவன செய்யத் தான் நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அதனூடாக அனைத்து அரச அதிகாரிகளுக்கும் பாடம் புகட்டப்படும் எனவும் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, கொரோனா மரணங்களில் நாட்டின் பத்து வீதமே உள்ள முஸ்லிம் சமூகத்திலிருந்தே பெரும்பான்மையானவர்கள் உள்ளடங்குகின்றமை குறித்தும் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment