ACJU உலமாக்கள் ஜனாதிபதி - பிரதமருக்கு கடிதம் - sonakar.com

Post Top Ad

Sunday 17 January 2021

ACJU உலமாக்கள் ஜனாதிபதி - பிரதமருக்கு கடிதம்

 


கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உறுப்பினர்கள்.


கடிதத்தின் தமிழ்ப் பிரதியினைக் கீழ்க்காணலாம்:


ACJU/SCR/2021/001


06 ஜனவரி 2021


அதி மேதகு கோடாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி


கௌரவ மஹிந்த ராஜபக்ஷ

முதலமைசச்சர்


கௌரவ பவித்ரா வன்னியாரச்சி

சுகாதார அமைச்சர்


டாக்டர் அஸேல குணவர்தன

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்


கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பானது


கொவிட்-19 தொற்று நோய் காரணமாக உலகம் முழுவதிலுமுள்ள நாடுகளில் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்பையும் அதனால் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளமையும் யாவரும் அறிவோம்.


இந்நிலையில் மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ள ஒரு விடயம் பற்றி நாம் தங்களுக்கு எழுத முனைந்தோம். கொவிட்-19 தொற்று காரணமாக மரணிப்பவர்களை தகனம் செய்யும் வழமை தொடர்வது பற்றிய எமது ஆளமான கவலையை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற நமது கோரிக்கை உலகின் பல சர்வதேச சுகாதார அமைப்புக்களின் வழிகாட்டல் படியே உள்ளதையும் உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் இதை அனுமதித்துள்ளார்கள் என்பதையும் நாம் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


கொவிட்-19 காரணமாக இறப்பவர்களை அடக்கம் செய்தால் அது நில நீரை மாசுபடுத்தி விடும் என்றும் மேலும் பல காரணங்களை காட்டியும் அடக்கத்திற்கு தடை விதித்து தகனம் மட்டுமே இந்த தொற்று நோயால் மரணிப்பவரக்ளின் உடலை அப்புறப்படுத்துவதற்கான ஒரே வழி என கட்டாயப்படுத்தி வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். ஆனால், கொவிட்-19 ஏற்பட்டது முதல் ஏறத்தாள உலகின் அனைத்து நாடுகளும் கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களை (தகனம் போன்றே) அடக்கம் செய்து வருவதையும், அதை மேற்கொண்டு வருவதால் எந்த நாடும் தாம் பாதிக்கப்பட்டதாகவும் கூறவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


ஸ்ரீலங்கா பிரஜா மருத்துவர்கள் கல்லூரி (CCPSL)

கொவிட் -19 பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதை ஆதரிக்கும் மிக சமீபத்திய அறிக்கையொன்றை ஸ்ரீலங்கா பிரஜா மருத்துவர்களின் கல்லூரி வெளியிட்டுள்ளது. அவர்கள், இறந்த உடல்களை அடக்கம் செய்வது கொவிட் -19 இன் பரவலை அதிகரிக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும், ஒவ்வொரு குடிமகனையும் அவரவர் மற்றும் அவரின் குடும்பத்தின் விருப்பத்தின் படி தகனம் செய்யவோ அல்லது அடக்கம் செய்யவோ அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

https://www.newsfirst.lk/2020/12/31/victims-can-be-buried-or-cremated-as-per-familys-wish/


ஸ்ரீ லங்கா மருத்துவச் சங்கம் (SLMA):

தற்போதுள்ள விஞ்ஞானத் தரவுகளின் அடிப்படையில் கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க முடியும் என ஸ்ரீ லங்கா மருத்துவச் சங்கமும் பரிந்துரை செய்துள்ளது. ஒரு உயிருள்ள உடலிலேயே வைரஸ் பெருக முடியுமென்றும் உயிரற்ற உடலில் குறிப்பிடுமளவு நீண்ட காலத்திற்கு வைரஸ்கள் வாழ முடியாது எனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.


https://www.newsfirst.lk/2021/01/03/sri-lanka-can-bury-covid-19-victims-slma/


பேராசிரியர் மலிக் பீரிஸ்

உலகப் பிரசித்தி பெற்ற நோய் நிர்ணய மற்றும் வைரஸ் நிபுணர் ஒருவரான, தற்போது ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் வைரஸ் பிரிவின் தலைவராக பணியாற்றும் இலங்கை பேராசிரியர் மலிக் பீரிஸ் அவர்களும் அடக்கம் காரணமாக கொவிட்-19 வைரஸ் பரவுவதன் சாத்தியப்பாடு மிக மிகக் குறைவு என்றும் உக்கிப்போகாத பொருளால் (மெடீரியல்) சுற்றி அடக்கம் செய்வது அதிகம் பாதுகாப்பானது எனவும் அவர் சிபாரிசு செய்துள்ளார்.


https://island.lk/dr-malik-suggests-burying-covid-19-victims-in-impermeable-wrapping/


டாக்டர் நிஹால் அபேசிங்ஹ

வைரஸ் நிபுணர் மற்றும் முன்னாள் அரச தொற்று நோய்ப்பிரிவின் தலைவர் டாக்டர் நிஹால் அபேசிங்ஹ அவர்களும் கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கலாம் என்றும் ஒரு அடக்கஸ்தளத்தின் நிலநீரிலிருந்து கிருமிகள் வெளியாகி சுகாதார அச்சுறுதல் ஏற்படும் என்ற கேள்விக்கே இடமிள்ளை எனவும் கூறியுள்ளார்.


http://www.ft.lk/opinion/Cremating-Muslim-corona-dead-bodies-Sri-Lanka-is-FOht-Whole-world-is-wrong/14-710412


உலக சுகாதார அமைப்பு (WHO)

2020 செப்டெம்பர் மாதம் உலக சுகாதார அமைப்பு ‘நோய் பரவல் தடுப்பு மற்றும் கொவிட்-19 பின்னணியில் உடல்களை அடக்கம் செய்தல்’ என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையிலும் குறிப்பிட்ட சில வழிமுறைகளை பேணும் பட்சத்தில் கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கலாம் என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேலும், தொற்று நோய் காரணமாக மரணிப்பவரின் உடலை தகனம் செய்ய வேண்டும் என ஒரு பொதுவான நம்பிக்கை இருந்தாலும், இதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளது என அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.


https://apps.who.int/iris/bitstream/handle/10665/331538/WHO-COVID-19-lPC_DBMgmt-2020.1-eng.pdf


அமெரிக்க சுகாதார மற்றும் மானிட சேவைகள் திணைக்களத்தின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் (CDC)

அமேரிக்காவிலுள்ள மேற்படி அமைப்பும் கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் நோய் பரவும் அபாயம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது. எனவே மரணித்தவரின் குடும்பத்தினர்களின், இறுதிக்கிரியை தொடர்பான விருப்பங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு கூறியுள்ளது.


https://www.cdc.gov/coronavirus/2019-ncov/daily-life-coping/funeral-guidance.html


இவை தவிர, இவ்விவகாரம் தொடர்பாக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவும் அடக்கம் மற்றும் தகனம் ஆகிய இரண்டையும் மேற்கொள்ளலாம் எனப் பரிந்துரைத்துள்ளது. அடக்கம் செய்யப்பட்ட பின்னர் நீர் மாசுபடுவதன் மூலம் வைரஸ் பரவுகிறது என்பதை நிரூபிக்க எந்த விஞ்ஞானபூர்வ ஆதாரமும் இல்லை என்றும் அக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


இஸ்லாமிய போதனைகளின்படி, மரணிப்பவரின் உடலை அடக்கம் செய்வது இறந்த நபருக்கு மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். எனவே இந்த உரிமையை மறுப்பது முஸ்லிம் சமூகத்திற்கு வேதனையையும் மிகுந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.


கொவிட் -19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தீங்கு விளைவிக்கும் அல்லது இந்த நோய் மேலும் பரவுவதற்கு வழிவகுக்கும் என்பதற்கு நம்பகமான விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதால், கட்டாய தகன நடைமுறை வழிமுறைகளை திருத்தி, அடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுபற்றி அறிவுறுத்துமாறும் தங்களை நாம் வேண்டிக்கொள்கின்றோம்.


பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இலங்கையர்களை ஒற்றுமைப்படுத்தி தேசத்தை வலுப்படுத்த இவ்வரசாங்கம் செயற்படும் என அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.


நமது இலங்கைத் திருநாட்டில் ஒற்றுமை மற்றும் சுபீட்சம் மலர எல்லாம் வல்ல இறைவன் அருள்புறிவானாக,


இப்படிக்கு, 


அஷ்-ஷைக் முஃப்தி M.I.M. ரிஸ்வி

தலைவர் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


அஷ்-ஷைக் M.S.M. தாஸீம்

பதில் பொதுச் செயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


கையொப்பதாரர்கள்:


  • அஷ்-ஷைக் A.C.M. அகார் முஹம்மத் - பிரதித் தலைவர்
  • அஷ்-ஷைக் A.L.M. கலீல் - பொருளாலர்
  • அஷ்-ஷைக் H. உமர்தீன் - உப தலைவர்
  • அஷ்-ஷைக் A.L.M. ரிழா - உப தலைவர்
  • அஷ்-ஷைக் M.J. அப்துல் ஹாலிக் - உப தலைவர்
  • அஷ்-ஷைக் A.L.M. ஹாஷிம் - உப தலைவர்
  • அஷ்-ஷைக் S.H. ஆதம் பாவா - உப தலைவர்
  • அஷ்-ஷைக் M.M.M. முர்ஷித் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் M.L.M. இல்யாஸ் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் M.F.M. ஃபாஸில் - நிறைவேற்று குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் K.M. முக்ஸித் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் அர்கம் நூராமித் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் ஹஸன் ஃபரீத் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் முஃப்தி M.H.M. யூசுப் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் A.C.M. ஃபாஸில் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் S.L. நவ்பர் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் M.K. அப்துர் ரஹ்மான் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் S.A.M. ஜவ்பர் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் A.R. அப்துர் ரஹ்மான் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் M.H.M. புர்ஹான் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • கலாநிதி அஸ்வர் அஸாஹிம் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் ஸகி அஹமட் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் M. நூமான் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • கலாநிதி M. L. M. முபாரக் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் M.S.M. ஃபரூத் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
  • அஷ்-ஷைக் M.A.A.M. பிஷிர் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்

No comments:

Post a Comment