மூன்றாவது சுற்றிலேயே ஜனாதிபதி - பிரதமருக்கு தடுப்பூசி - sonakar.com

Post Top Ad

Sunday, 17 January 2021

மூன்றாவது சுற்றிலேயே ஜனாதிபதி - பிரதமருக்கு தடுப்பூசி

 


இலங்கையில் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் சுகாதாரத்துறையில் பணியாற்றுவோருக்கே முதற் கட்டமாக தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்ததாக பாதுகாப்பு படையினருக்கும் மூன்றாவதாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் மூன்றாவது குழுமத்திலேயே வருவதாகவும் இதன் போதே அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment