தடுப்பூசி: 50 மில்லியன் டொலர் வழங்க முன்வந்துள்ள பிரன்டிக்ஸ்! - sonakar.com

Post Top Ad

Saturday, 9 January 2021

தடுப்பூசி: 50 மில்லியன் டொலர் வழங்க முன்வந்துள்ள பிரன்டிக்ஸ்!

 கொரோனா தடுப்பூசி கொள்வனவுக்கு அரசுக்கு உதவும் நிமித்தம் பிரன்டிக்ஸ் நிறுவனம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசின் தடுப்பூசிக்கான குழுவின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம் குறித்த நிறுவனம் இதற்கான வாக்குறுதியை வழங்கியுள்ள அதேவேளை தடுப்பூசி கொள்வனவுக்கு மாத்திரமே இந்நிதி பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், தடுப்பூசி நாட்டில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்கம் நிமித்தம் இலங்கை அரசு 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அதில் கால் பங்கினை குறித்த நிறுவனம் வழங்க முன் வந்துள்ளமையும், ஒக்டோபரில் ஆரம்பித்த இரண்டாவது அலை இந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவரிலிருந்தே ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment