24ம் திகதி வரை உக்ரைனில் 'லொக்டவுன்' - sonakar.com

Post Top Ad

Saturday, 9 January 2021

24ம் திகதி வரை உக்ரைனில் 'லொக்டவுன்'

 


இம்மாதம் 24ம் திகதி வரைக்கும் உக்ரைனில் தேசிய மட்டத்திலான லொக்டவுன் அமுலுக்கு வந்துள்ளது. அங்கு கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் பின்னணியில் அரசாங்கம் இந்நடவடிக்கையை அறிவித்துள்ளது.


கடந்த வருடம் செப்டம்பர் முதல் அங்கு கொரோனா பரவல் தீவிரமாக இருக்கின்ற அதேவேளை இதுவரை 20,432 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அரசு மீண்டும் லொக்டவுன் அறிவித்துள்ளது.


இந்நிலையில், உதயங்க வீரதுங்கவின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment