யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக நிறுவப்பட்டிருந்த நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டதன் எதிரொலியாக இன்றைய தினம் வட - கிழக்கு பகுதிகளில் ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ் அரசியல் தரப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் பூரண ஒத்துழைப்பை அறிவித்திருந்தன.
இந்நிலையில் யாழ் - கிளிநொச்சி - வவுனியா மற்றும் கிழக்கில், மட்டக்களப்பு - காத்தான்குடி - வாழைச்சேனை - களுவாஞ்சிக்குடி போன்ற முக்கிய பகுதிகள் உள்ளடங்கலாக பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை முடங்கியுள்ளது. வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ள அதேவேளை தனியார் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. பாடசாலைகளுக்கு மாணவர் வரவு இல்லாத நிலை காணப்பட்டுள்ளது.
யாழ் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதமுமிருந்து வந்த நிலையில் இன்று அவர்களை சந்தித்த பல்கலை துணை வேந்தர், மீண்டும் தூபியை நிறுவ இணக்கம் தெரிவித்து, அடிக்கல் நட்டதன் பின்னணியில் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment