ஜனாஸா கன்டைனர்கள்: அமைச்சிடம் DG நேரடி கோரிக்கை - sonakar.com

Post Top Ad

Monday 21 December 2020

ஜனாஸா கன்டைனர்கள்: அமைச்சிடம் DG நேரடி கோரிக்கை

 


கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ள முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் அரசு முடிவொன்றை எட்டும் வரை, அவற்றைப் பிரத்யேகமாக வைத்துப் பாதுகாக்க குளிரூட்டப்பட்ட கன்டைனர்களை உபயோகிக்கும் திட்டத்தை முன் வைத்துள்ள சுகாதார பணிப்பாளர், சுகாதார அமைச்சிடம் அதற்கான கோரிக்கையை முன் வைத்துள்ளார்.


இதனடிப்படையில், ஐந்து குளிரூட்டப்பட்ட கன்டைனர்களை இதற்கென வழங்குமாறு சுகாதார பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும், முஸ்லிம் சமூகத்தில் அரசுக்கு இந்த கன்டைனர்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளிலும் சிலர் உணர்வுபூர்வமாக நிதி சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமையை அவதானிக்க முடிகிறது.


ஜனாஸாவைக் கொண்டு செல்வதற்கும் சாம்பலைத் தருவதற்குமாக 58000 ரூபா பணம் அறவிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஜனாஸாக்களை கைவிடும் நூதன போராட்டம் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், சாம்பல் முட்டிகளும் குவிந்து கிடப்பதாகவும் இது தொடர்பில் அவசர நடவடிக்கை அவசியம் எனவும் சுகாதார பணிப்பாளர் இவ்வாறு கன்டைனர்களை கோரியுள்ளார்.


இச்சூழ்நிலையில், அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை சமூகத்தவர் அவசப்பட்டு செய்ய வேண்டிய அவசியமில்லையெனவும் சமூக வலைத்தளங்களில் விசனம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment