முஸ்லிம் 'நிபுணர்களையும்' குழுவில் உள்ளடக்க ஆலோசனை - sonakar.com

Post Top Ad

Monday, 21 December 2020

முஸ்லிம் 'நிபுணர்களையும்' குழுவில் உள்ளடக்க ஆலோசனை

 


கொரோனா தொற்றினால் உயிரிழப்போரை கட்டாயமாக எரியூட்டியே ஆக வேண்டும் என்ற முடிவையெடுத்த இலங்கையின் நிபுணர் குழுவை விஸ்தரித்து, அதில் முஸ்லிம் நிபுணர்களையும் உள்ளடக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் எங்குமே வரண்ட நிலமும் இல்லை, கொரோனா உடலங்களை புதைப்பது பாதுகாப்பில்லை, அவை உயிரியல் ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்படக் கூடும் எனவும் தெரிவித்து வரும் குறித்த நிபுணர் குழுவிடமே கட்டாய எரிப்பை மீளாய்வு செய்யும் பணியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இவ்வாரம் அக்குழுவை விஸ்தரித்து முஸ்லிம் சமூகத்திலிருந்தும் துறைசார் நிபுணர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தகவல் அறியமுடிகிறது (சோனகர்.கொம்).

No comments:

Post a Comment