புத்தளம்: பறவைகள் திடீர் மரணம் தொடர்பில் விசாரணை - sonakar.com

Post Top Ad

Friday, 25 December 2020

புத்தளம்: பறவைகள் திடீர் மரணம் தொடர்பில் விசாரணை


 


புத்தளம், வனாத்தவில்லு பகுதியில் நூற்றுக்கு அதிகமான பறவைகள் இறந்து வீழந்துள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நச்சு கலந்த உணவை உண்டதனால் இவ்வாறு பெரும் தொகையான பறவைகள் இறந்து வீழ்ந்திருப்பதாக சந்தேகிக்கப்படுவதுடன் வேறு விலங்குகள் புசிப்பதைத் தவிர்க்கும் நோக்கில் பறவைகளை அப்புறப்படுத்துள்ளது வன ஜீவிகள் பாதுகாப்பு மையம்.


வனாத்தவில்லு, எளுவான்குளம், ரல்மடுவ பகுதி வயல் வெளியொன்றிலேயே இவ்வாறு பறவைகள் இறந்து காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment