ஜனாஸா எரிப்புக்கு எதிராக யாழ் - சம்மாந்துறையில் கவனயீர்ப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 25 December 2020

ஜனாஸா எரிப்புக்கு எதிராக யாழ் - சம்மாந்துறையில் கவனயீர்ப்பு

 


இலங்கையில் பிரத்யேகமாக அமுலில் இருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பை எதிர்த்து யாழ்ப்பாணம் மற்றும் சம்மாந்துறையில் இன்று கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.


புதைக்க வழியில்லையென்று ஏமாற்றாதே, சமய உரிமைகளுடன் நிம்மதியா வாழ விடு போன்ற பதாதைகள் ஏந்தி மக்கள் தமது எதிர்ப்புணர்வுகளை வெளிக்காட்டியிருந்தனர்.


இதேவேளை, எதிர்வரும் ஞாயிறு பேருவளையிலும் திங்களன்று (பெரும்பாலும்) புத்தளத்திலும் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறியமுடிகிறது.


என்.எம்.அப்துல்லாஹ் / ஐ.எல்.எம் நாஸிம் / நூருல் ஹூதா உமர்

No comments:

Post a Comment