உடல்கள் அதிகரித்தால் 'இடப்பற்றாக்குறை' வரும்: உபுல் ரோஹன - sonakar.com

Post Top Ad

Monday 21 December 2020

உடல்கள் அதிகரித்தால் 'இடப்பற்றாக்குறை' வரும்: உபுல் ரோஹன

 


கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை எரிப்பதற்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், தற்சமயம் ஜனாஸாக்களை குளிரூட்டப்பட்ட பிரத்யேக கன்டைனர்களில் வைத்துப் பாதுகாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம் காலி மஜிஸ்திரேட் நீதிமன்றமும் இதற்கமைவாக தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இதனை ஆதாரமாக வைத்து தமது உறவினர்களின் உடலங்களை எரிக்கக் கூடாது எனும் போராட்டம் வலுத்தால் கொரோனா உடலங்கள் குவிந்து, அவற்றைப் பாதுகாத்து வைப்பதற்கான இடப்பற்றாக் குறை உருவாகும் என தெரிவிக்கிறார் சுகாதார ஆய்வாளர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன.


சுகாதார பணிப்பாளர் ஐந்து பிரத்யேக கன்டைனர்களைக் கோரியுள்ள நிலையில் கொழும்பில் அது நிறுவப்பட்டு உடலங்கள் அங்கு சேர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காலி நீதிமன்ற உத்தரவின் பேரில் கராபிட்டிய வைத்தியசாலையில் ஒரு ஜனாஸா குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆயினும், விரைவில் இடப்பற்றாக்குறை பிரச்சினை வரும் எனவும் அதனால் எரிப்பது சுலபம் எனவும் உபுல் ரோஹன தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment