உள்நாட்டு அழுத்தம்: இலங்கைக்கு 'நோ' சொன்னது மாலைதீவு! - sonakar.com

Post Top Ad

Monday, 21 December 2020

உள்நாட்டு அழுத்தம்: இலங்கைக்கு 'நோ' சொன்னது மாலைதீவு!

 


இலங்கையிலிருந்து கொரோனா உடலங்களை மாலைதீவுக்கு அனுப்புவதற்கு இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.


இவ்விவகாரத்தின் பின்னணியைப் பற்றி முழுமையாக ஆராயாத நிலையில முதலில் மாலைதீவு இணங்கியிருந்த போதிலும், ஐக்கிய இராச்சியத்தில் சமூக அமைப்புகளின் முயற்சியில் உள்நாட்டில் உருவாக்கப்பட்டிருந்த அழுத்தத்தினால் மாலைதீவு நிர்வாகம் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.


ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் 18 இலங்கை முஸ்லிம் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து அந்நாட்டில் இயங்கும் மாலைதீவு தூதரகம் ஊடாக அழுத்தங்களை மேற்கொண்டிருந்த நிலையில், மாலைதீவு ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் அந்நாட்டின் முக்கிய சமூக - சமய அமைப்புகளும் இவ்விடயத்தில் மாலைதீவு தலையிடக்கூடாது எனவும் மாறாக இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் உள்நாட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.


அத்துடன், மாலைதீவு சமூக வலைத்தள பாவனையாளர்களும் இதில் பாரிய பங்களித்திருந்த நிலையில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டைப் பரிசீலனை செய்து இலங்கை அரசின் கோரிக்கையைக் கை விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்)

No comments:

Post a Comment