கிண்ணியா போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை - sonakar.com

Post Top Ad

Saturday, 26 December 2020

கிண்ணியா போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை

 


ஜனாஸா எரிப்பை எதிர்த்து கிண்ணியாவில் ஞாயிறு காலை இடம்பெறவிருந்த போராட்டத்துக்கு பொலிசார் நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவைப் பெற்றுள்ளனர்.


வெள்ளைத்துணி கட்டி அமைதிப் போராட்டமாக இது திட்டமிடப்பட்டிருந்ததாக ஏற்பாட்டுக் குழுவின் பொறுப்பாளரும் கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தி தெரிவித்தார். எனினும், வீடுகளிலிருந்து அடையாள எதிர்ப்பு நடவடிக்கை தொடரும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.


இதேவேளை, பேருவளை பகுதியில் இடம்பெறவிருந்த போராட்டத்துக்கும் அப்பகுதியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது சகாக்களும் எதிர்ப்பை வெளியிட்டு பொலிசார் ஊடாக தடைகளை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


- Hasfar A. Haleem / B. Gaffoor

No comments:

Post a Comment