ஒரு வருடத்துக்குள் நாடு 'வங்குரோத்து' நிலை: அசாத் - sonakar.com

Post Top Ad

Saturday, 26 December 2020

ஒரு வருடத்துக்குள் நாடு 'வங்குரோத்து' நிலை: அசாத்

 


நாட்டை முன்னேற்றப் போவதாகவும் மக்களுக்கு சுபீட்சமளிக்கப் போவதாகவும் சொல்லிக் கொண்டு ஜனாதிபதியான கோட்டாபே ராஜபக்ச, பதவியேற்று ஒரே வருடத்துக்குள் நாட்டை பாதாளத்தில் தள்ளி வங்குரோத்து நிலைக்குத் தள்ளியிருப்பதாக தெரிவிக்கிறார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி.


இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், வரலாற்றில் முதற்தடவையாக  நாடு இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.


இலங்கையின் வங்கிகளை வெளிநாடுகள் நிராகரிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளதாகவும் பொருளாதாரம் முற்றாக நிலைகுலைந்து போயுள்ளதாகவும் அசாத் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment