ஒன்லைன் அடையாள எதிர்ப்பு: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 25 December 2020

ஒன்லைன் அடையாள எதிர்ப்பு: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

 


இலங்கையில் இடம்பெற்று வரும் கட்டாய ஜனாஸா எரிப்பு நடவடிக்கையினை நிறுத்தி, உரிமைகளைப் பாதுகாக்குமாறு கோரும் வகையில் இணைய வழியூடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒன்லைன் எதிர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமாக பங்கேற்று வருகின்றனர்.


https://www.facebook.com/2020MFSJ என்ற முகநூல் பக்கம் ஊடாக அரசிடம் வினயமாக வேண்டிக் கொள்ளும் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் பெருமளவு சமூக வலைத்தள பாவனையாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.


2020 சமூக நீதிக்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த பக்கத்தில் "டிசம்பர் 25ம் திகதி - ஒரு வேண்டுகோள்" எனும் அடிப்படையில் வெளியிடப்பட்ட பிரச்சாரப் படம் பத்தாயிரத்துக்கும் அதிகமான தடவைகள் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முகநூல் பக்கத்திற்கான இணைப்பு: https://www.facebook.com/2020MFSJ
No comments:

Post a Comment