காலி நீதிமன்றில் நடந்தது என்ன? சமூகம் தெரிந்து கொள்வதற்காக..! - sonakar.com

Post Top Ad

Monday 21 December 2020

காலி நீதிமன்றில் நடந்தது என்ன? சமூகம் தெரிந்து கொள்வதற்காக..!

 



சமூகம் தெரிந்து வைத்துக் கொள்வதற்காக.... இன்று காலி நீதிமன்றில் நடந்த வழக்கு  பற்றிய விபரம்:


காலி, கராபிட்டியைச் சேர்ந்த 84 வயது சகோதரர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு அவரது ஜனாஸாவை எரித்தாக வேண்டும் என்று பிராந்திய MOH விடாப்பிடியாக இருந்தார். குடும்பமோ அதனை ஏற்றுக்கொள்ளவோ பொறுப்பேற்கவோ முடியாது என்று உறுதியாக நின்றது. ஆதலால், நீதிமன்றில் வழக்காடப்பட்டது.


இதன் போது, சட்டத்தரணிகள் கஸ்ஸாலி ஹுசைன், பிரசாந்த டி சில்வா, எஸ்.எம்.எம். நிலாம், பைரூஸ் மரிக்கார், இல்ஹாம் சமாஷ், துஷார வராபிட்டிய ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பில் ஆஜராகியிருந்தனர்.  அங்கு வாதாட்டத்தை முன்வைத்த எமது சட்டத்தரணிகள் குறிப்பாக, உடலங்களை எரிப்பதா - புதைக்க அனுமதிப்பதா என்ற சந்தேக நிலையில் சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன, தற்காலிகமாக ஜனாஸாக்களை வைத்துப் பாதுகாக்க குளிரூட்டப்பட்ட கன்டைனர்கள் ஐந்தைத் தருமாறு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்த நிலையில், அதனை மீறி எரிப்பது அவசியமற்றது என வாதாடிய சட்டத்தரணிகள், சுகாதார பணிப்பாளர் காத்திருக்கும் அந்த 'இறுதி' முடிவு வரும் வரை இந்த ஜனாஸாவையும் எரிக்க அனுமதி மறுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அதை ஏற்றுக் கொண்ட காலி கூடுதல் மஜிஸ்திரேட், உடலத்தை கராபிட்டிய வைத்தியசாலையில் குளிரூட்டிப் பாதுகாக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


இங்கு கவனிக்க வேண்டியது:


சுகாதார பணிப்பாளர் காத்திருக்கும் அந்த 'இறுதி' முடிவு நாளை வந்தால், நாளை நிலைமை மாறும். அடுத்த வாரம் வந்தால்... அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதம் என்றால் அடுத்த மாதம். 36 நாட்கள் தாண்டினால் அவர்களே கூறிய விஞ்ஞான கால எல்லை முடிந்து விடும். இருந்தாலும், அவசரப்பட்டு எரியூட்டுவதற்கு ஒப்பமிட வேண்டிய அவசியமில்லை. நாட்டில் எந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் அது எல்லா இடமும் செல்லுபடியாகும் தீர்ப்புதான். 


நிதானமாக விடயங்களை அறிந்து செயற்படுவது சமூகத்தின் கடமையாகும், எத்தி வைக்க வேண்டியது எனக்கும் கடமையென்ற அடிப்படையில் இந்த விளக்கத்தை பதிகிறேன்.

- Irfan Iqbal

21-12-2020


1 comment:

Mohammad Akram said...

innalillahiwainnailaihirojiun

Post a Comment