துருக்கியிடமிருந்து இலங்கைக்கு மேலும் உதவிகள் - sonakar.com

Post Top Ad

Saturday, 26 December 2020

துருக்கியிடமிருந்து இலங்கைக்கு மேலும் உதவிகள்

 கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளுக்கு உதவும் நிமித்தம் மேலும் உதவிகளை வழங்கியுள்ளது துருக்கி.


இப்பின்னணியில் 150 Benchtop Centrifuges  உபகரணங்கள் துருக்கி தூதரகம் ஊடாக சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. திரவ மாதிரியின் மூலக்கூறுகளை பிரித்து பரிசோதனை நடாத்துவதற்கு உதவும் இவ்வகை இயந்திரங்களை துருக்கியின்  NUVE நிறுவனம் தயாரித்து வருகிறது.


இரு நாட்டு கூட்டுறவு மற்றும் நட்புறவை வளர்க்கும் நோக்கில் இவ்வுதவிகள் வழங்கப்படுவதாக தூதரகம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).

No comments:

Post a Comment