ஜனாஸாக்களை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட கன்டைனர்கள் - sonakar.com

Post Top Ad

Sunday, 20 December 2020

ஜனாஸாக்களை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட கன்டைனர்கள்

 


கொரோனா பாதிப்பினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட கன்டைனர்களை நிறுவும் திட்டம் ஒன்று ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.


கட்டாய ஜனாஸா எரிப்புக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழுத்தங்களை சந்தித்து வரும் நிலையில் இவ்விடயத்தில் தனித்து நிற்கும் இலங்கையின் நிலைப்பாடு பாரிய அளவில் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.


எதுவித விஞ்ஞான பூர்வ ஆதாரங்களுமின்றி கட்டாய எரிப்பை மேற்கொள்ளும் இலங்கை, இறந்த உடல்களில் 36 நாட்களுக்கு வைரஸ் உயிர் வாழும் எனவும் தெரிவிக்கிறது. இந்நிலையிலேயே, குளிரூட்டப்பட்ட கன்டைனர்களில் உடலங்களைப் பாதுகாத்து இறுதிக் கடமைகளை செய்ய அனுமதிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது (sonakar.com).

No comments:

Post a Comment