தடுப்பூசி கொள்வனவுக்கு 13 பில்லியன் ரூபா கடன்! - sonakar.com

Post Top Ad

Sunday, 20 December 2020

தடுப்பூசி கொள்வனவுக்கு 13 பில்லியன் ரூபா கடன்!

 


கொரோனா தடுப்பூசி கொள்வனவுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் 13 பில்லியன் ரூபா கடனைப் பெறுவதற்கு அரசு மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பல சர்வதேச நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை உலக வங்கியும் இதற்கான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உலக சுகாதார அமைப்பூடாக இலங்கை சனத்தொகையின் 20 வீத எண்ணிக்கைக்குச் சமமான தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment