கைதி தாக்கி பொலிஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியசாலையில் - sonakar.com

Post Top Ad

Friday, 18 December 2020

கைதி தாக்கி பொலிஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியசாலையில்

 


பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டொன்றில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த கைதி, விசாரித்த பொலிஸ் இன்ஸ்பெக்டரைத் தாக்கிய சம்பவம் களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.


தான் அவ்வாறு எதையும் செய்யவில்லையென்று கடுமையாக மறுத்து வந்த நபர், திடீரென பொலிஸ் அதிகாரியின் முகத்தில் தாக்குதல் நடாத்தியதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிசார் தெரிவிக்கின்றனர்.


தாக்குதலுக்குள்ளான பொலிஸ் அதிகாரி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment