வாகன பதிவுகள் கடும் வீழ்ச்சி - sonakar.com

Post Top Ad

Friday, 18 December 2020

வாகன பதிவுகள் கடும் வீழ்ச்சி

 


நாட்டில் புதிய வாகன பதிவுகள் கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.


கடந்த வருடம் நவம்பரோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் எட்டு மடங்கு குறைவாக, 2900 வாகனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தினசரி சராசரியாக 33 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை இவ்வருடம் நவம்பர் மாதம் முழுவதும் 13 முச்சக்கர வண்டிகளே பதிவு செய்ய்பபட்டுள்ளன.


மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பேருந்து விற்பனைகள் அனைத்தும் முழுமையாக முடங்கிப் போயுள்ளதுடன் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment