டிசம்பர் 26 முதல் சுற்றுலாப் பயணிகள் வருகை - sonakar.com

Post Top Ad

Sunday, 20 December 2020

டிசம்பர் 26 முதல் சுற்றுலாப் பயணிகள் வருகை

 


டிசம்பர் 26ம் திகதி முதல் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விமான நிலையங்களை திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இப்பின்னணியில், முதற்கட்டமாக கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களுக்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் அழைத்துவரப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்தும் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்ற அதேவேளை, சுற்றுலாப் பயணிகள், குறிப்பிட்ட சில இடங்களுக்கே செல்வதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment