வீடுகளில் மரணங்கள் அதிகரப்பு ஆபத்தானது: GMOA - sonakar.com

Post Top Ad

Thursday, 5 November 2020

வீடுகளில் மரணங்கள் அதிகரப்பு ஆபத்தானது: GMOA

 


அண்மைக்காலமாக வீடுகளில் கொரோனா மரணங்கள் நிகழ்வது அதிகரித்துள்ளமையானது ஆபத்தான சூழ்நிலையைக் காட்டி நிற்கிறது என எச்சரிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.


60,000 பேரளவில் வீடுகளில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வது இலகுவான காரியமன்று எனவும் அதற்கான தயார் நிலை சந்தேகத்துக்குரியது எனவும் சுட்டிக்காட்டியுள்ள மருத்துவர் ஹரித் அலுத்கே, பெரும்பாலானோரின் தனிமைப்படுத்தல் காலம் முடிவுற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


கடந்த இரு வாரங்களில் 16 மரணங்கள் நிகழ்ந்துள்ள அதேவேளை அவற்றில் பல வீடுகளிலேயே இடம்பெற்றுள்ளமையும் இறந்த பின்னரே கொரோனா தொற்றிருந்தமை கண்டறியப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment