மத்ரசாக்கள் - ஆலிம்கள் தொடர்பில் அரசு விழிப்புடன்: GL - sonakar.com

Post Top Ad

Saturday, 21 November 2020

மத்ரசாக்கள் - ஆலிம்கள் தொடர்பில் அரசு விழிப்புடன்: GL

 இலங்கையில் இயங்கும் மத்ரசாக்களில் ஆலிம்களாகப் பணியாற்றும் நிமித்தம் விசாவுக்காக விண்ணப்பிப்போர் தொடர்பில் கூடுதலான பரிசோதனைகள் நடாத்தப்பட்டு, அவர்களது பின் புலம் மற்றும் கடந்த காலம் தொடர்பிலான தகவல்களும் ஆராயப்படுவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ஜி.எல். பீரிஸ்.


ஜனாதிபதி கோட்டாபே ராஜபகச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்திலேயே இதற்கான பொறிமுறையொன்று செயற்பாட்டில் இருந்ததாகவும் அதன் நடைமுறைகள் தற்போது தொடர்வதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


நாட்டில் இயங்கும் மத்ரசாக்கள் தொடர்பில் அரசு தொடர்ந்தும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment