பண்டாரகம, அட்டுலுகம பகுதியில் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சமூக மட்டத்திலான கொரோனா பரவல் இல்லையெனவே தொடர்ந்தும் சுகாதார அமைச்சு தெரிவித்து வருகின்றமையும் அட்டுலுகம பகுதிக்கு கொரோனா தொற்று பரவியமை தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment