அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணமுள்ளனர்.
எனினும், தனது தோல்வியை ஏற்றுக் கொள்ள மறுக்கும் ட்ரம்ப், பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளங்களில் பதிந்து வரும் அதேவேளை அவரது பதிவுகள் குறித்த தளங்களில் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
அமெரிக்க தேர்தல் முடிவுகளில் நடந்த போராட்டம், அவர்களின் ஜனநாயகத்தின் 'கோர' முகம் என ஈரானிய தலைவர் காமெய்னி கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment