இழுபறிக்குள்ளாகியிருந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தற்போது இறுதிக் கட்டத்தையடைந்துள்ள நிலையில் தேவையான 27க்கு அதிகமான இடங்களைத் தமதாக்கிக் கொண்டு ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் முடிவுகளை ஏற்க மறுக்கும் டொனால்ட் ட்ரம்ப், அதற்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக தெரிவித்து வந்த போதிலும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து இடம்பெற்று வந்ததோடு தற்போது 273 இடங்களைப் பெற்றுள்ள நிலையில் பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வந்த போதிலும் பைடன் தமது ஆதரவாளர்களை அமைதி காக்கும்படி வலியுறுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment